அற்புதங்கள்  
 
பேயை அழித்த அய்யா
 
நான் தண்டையார்பேட்டை பர்மா தெருவில் வசித்து வருகிறேன். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். மணவலிமை அதிகம் கொண்டவன். ஒரு நாள் டி.வி ஆப் செய்துவிட்டு (பவர் லைட் ஆன்-ல் இருந்தது) டி.வி யை பார்த்துக் கொண்டே படுத்தேன். இமைப்பொழுதில் ஒரு கருப்பு உருவம் டி.வி பவர் லைட்டை மறைத்து நின்றது என் கண்ணுக்கு தெரிந்தது. யாரது என்று எழுந்து குரல் கொடுத்தேன்.

கருப்பு உருவம் மறைந்து பவர் லைட் தெரிந்தது. இதைத் தொடர்ந்து தினந்தோறும் இரவு 12.00 மணி முதல் 1:00 மணி வரை பல கோணங்களில் இந்த கருப்பு உருவம் தொந்தரவு கொடுத்து வந்தது. நான் படுத்துக் கொண்டிருக்கும் போது கருப்பு உருவம் தலையை விரித்துக் கொண்டு என் தலை அருகில் நிற்க்கும். அதன் தலைமுடி பந்து போன்று நெருப்பு தோற்றத்துடன் வீட்டை சுற்றி வந்து வெளியில் செல்லும். எனது 2 வயது மகள் பகல் 12:00 மணியளவில் தலைமுடி விரித்து நின்ற் கருப்பு உருவத்தை பார்த்து முடி முடி என்று கத்தினாள். சமையலறையில் பாத்திரங்கள் அசைகிற சத்தம் கேட்கும். இந்த நிகழ்ச்சிகாளால் நாங்கள் தினமும் லைட் போட்டுக் கொண்டே வெளிச்சத்தில்தான் மதியின்றி அவதிப்படுவோம். எங்களால் சரியாக தூங்கவும் முடியாதி.


இந்த சூழ் நிலையை பார்த்த எனது பக்கத்து வீட்டில் உள்ள திருமதி. மங்களம் அக்கா அவர்கள் தண்டையார்பேட்டையில் உள்ள அகிலத்திரட்டு அம்மானை எழுதிய திரு.அரிகோபால சீசரின் ஐந்தாவது தலைமுறை வாரிசாகிய திரு.அரிகோபால சீசர் அவர்கள் வீட்டிற்கு குடும்பத்துடன் அழைத்து சென்றர்கள். எனது மனைவி அங்காளம்மனை கும்பிடுவாள்

திரு.அரிகோபாலசீசர் அய்யா அவர்கள், எங்கட்கு நெற்றியில் நாமமிட்டு பதம், கனி, நாமம் கொடுத்து வீட்டில் பூஜையறையில் வைக்க சொன்னார்கள். பதத்தை தெளிக்கவும் சொன்னார்கள். எங்களை ஐந்து வாரம் மணலி புதுநகர் தர்மபதிக்கு வந்து உச்சிபடிப்பில் கலந்து கொள்ள சொன்னார்கள். இரண்டாவது வாரம் உச்சிபடிப்புக்கு பின் அன்னம் அருந்திவிட்டு திருஏடு பார்த்தோம். திருஏட்டை பார்த்து திரு.தேவதாஸ் அய்யா அவர்கள் பேய் நடமாட்டம் எங்களது வீட்டில் அதிகமாக உள்ளது என்றார்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்கும்போது தண்டையார்ப்பேட்டை திரு.சீசர் அய்யா வீட்டின் எதிரில் இருந்து வருகிறேன் என்றேன், உடனே அவர் திரு,சீசர் அய்யாவை வீட்டில் பதம் தெளிக்க சொல்லுங்கள் என்றார்.

திரு.சீசர் அய்யா அவர்கள் பதம் தெளித்தார்கள். மேலும் மணலிபுதுநகர் அய்யா தர்மபதியில் இருந்து கனி கொடுத்து எங்கள் வீட்டு வாசலில் கட்ட சொன்னார்கள். அப்படி கனியை கட்டிய அன்று இரவு 12:00 மணிக்கு மேல் எங்கள் கண்முன்னால் ஊதுபத்தி ஸ்டாண்ட் பூஜை அறையில் இருந்து ஹாலின் மத்தியில் வந்து விழுந்தது. அய்யாதான் எங்களை பயமுறுத்திய அந்த கருப்புருவத்தை விரட்டியுள்ளார்கள். நாங்கள் இதன்பின்பு நிம்மதியாக வாழ்கிறோம்.

கடவுள் நம்பிக்கையே இல்லாத நான், இந்த நிகழ்ச்சிக்கு பின் தினமும் நெற்றியில் திரு -நாமமிட்டுதான் வெளியில் செல்கிறேன். எந்த தொழில் செய்தாலும் எங்களை காப்பாற்றிய அய்யாவின் பெயரை உச்சரித்துக் கொண்டுதான் செய்கிறேன். வாரந்தோறும் தவறாமல் மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதிக்கு சென்று உச்சிபடிப்பில் கலந்துக் கொள்கிறோம்.

இதைப்படிக்கும் மக்கள் அனைவரும் மணலிபுதுநகர் அய்ய வைகுண்ட தர்மபதிக்கு வந்து அய்யாவை வணங்கி அவரது அருளும் ஆசியையும் என்னைப்போல் நீங்களும் எல்லா சுகமும் பெற்று அன்பாய் வாழுங்கள்.

 
 
வீடியோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Copyrighst @ Ayya Vaigunda Dharmapathi , Manali Puthu Nagar, Chennai