வரலாறு  
 
 

சென்னைவாழ் அய்யாவின் அன்புகொடி மக்களெல்லாம் நமக்கு ஒரு வழிப்பாட்டுஸ்தலம் இல்லையே என்று ஏங்கி தவித்த காலத்தில், 03-10-1989 அன்று அய்யாவால் தேர்ந்து எடுக்கப்பட்டு கொடுத்த இடம் தான் இந்த மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி. சென்னை மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் 32 அறங்கள் பொருந்திய சிம்மாசனத்தில் அரசாட்சி செய்து, வரும் பக்தர்களுக்கு அருள்புரிகின்றார்.

அய்யா வைகுண்ட தர்மபதியில் பள்ளியறை. சுற்றபிரகார மண்டபம், தியான மண்டபம், அர்த்த மண்டபம், ஏழு நிலையில் 63 அடி உயர ராஜ கோபுரம். ஐந்து துணை கோபுரங்கள், 96 கால் தத்துவ மண்டபம், 64 தூண்கள் பொருந்திய அய்யா வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்க்கு அருள்பாலிக்கும் சுற்று பிரகார மண்டபம், 450 நபர்கள் அமர்ந்து சப்பிடக்கூடிய அன்னக்கூடம், நிர்வாக அலுவலகம் மற்றும் அய்யா வைகுண்ட பரம்பொருள் பதிவலம்வர 12 வாகனங்களும், வாகன மண்டபமும் அமைந்துள்ளது.

மேலும் அய்யா வைகுண்ட மூர்த்தியின் முழு வரலாறும் தெரிய வேண்டும் என்கிற பக்தர்களுக்கு, அய்யா முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக அருளிய அகிலத்திரட்டு எனும் ஆகமம் மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி வளாகத்தில் கிடைக்கும். தொடர்பு கொள்ளலாம்.

வாகனங்கள்:

அய்யா காளை வாகனம், அன்ன வாகனம், கருட வாகனம், மயில் வாகனம், அனுமார் வாகனம், சர்ப வாகனம், மலர் முக சிம்மாசன வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், இந்திர விமான வாகனம், பூம்பல்லக்கு வாகனம், தொட்டில் வாகனம், சப்பரவாகனம் ஆகிய வாகனங்களிள் பதியில் பவனி வருகின்றார்.

36அடி உயரம் உள்ள திருதேரும் உள்ளது.

பணிவிடை கால நேரம்:

தினமும் காலை 6:00 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு
தினமும் பகல் 12:00 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு
தினமும் மாலை 5:30 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு மற்றும் அய்யா வாகனத்தில் பதிவலம் வந்து மக்களுக்கு அருளும் ஆசியும் வழங்குவார்க்ள்

தலைப்பாகை - ஏன் ?

அய்யா வைகுண்டரை வழிபடுபவர்கள் தலைப்பாகை அணியும் வழக்கம் உள்ளவர்கள். இதற்க்கு காரணம், மன்னர்கள் ஆட்சி காலத்தில் உயர் சாதியினர் எதிரில் வந்தால், மற்ற சாதியை சேர்ந்த ஆண்கள் துண்டை இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும் அல்லது கை இடுப்பில் வைத்து குனிந்து நிற்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது.

கலி அடிமைத்தனத்தை உடைத்தெறியும் பொருட்டு தனது பக்தர்கள் தலையில் துண்டை தலைப்பாகையாகக் கட்ட வைத்தவர் அய்யா. என் முன்புக்கூட நீ தலைப்பாகையோடுதான் நின்று பேச வேண்டும் என்று அய்யா சொன்னதும் இங்கே நினைவு கூறத்தக்கது.

கண்ணாடி - ஏன் ?

அய்யாவை உருவம் அற்றவராக வழிபடும் இடத்தில் அவருக்கு பின்னால் கண்ணாடி இருக்கும், அதன் தத்துவம் அய்யாவை வணங்கும்போது நமது உருவம் அதில் தெரியும்.

நீ தான் நான், நான் தான் நீ என்று இறைவன் சொன்ன தத்துவத்தை குறிக்கின்றது.

உன்னுள்ளே நான் (இறைவன்) இருக்கிறேன் என்ற த்ததுவத்தை குறிக்கின்றது.

கலி என்னும் மாயை நம்மை பற்றிக் கொள்ளாமல் உள்ளத்தை கண்ணாடி போல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை குறிக்கின்றது.

உன்னிடத்தில் இருந்து பிரதிபலிக்கும் எண்ணமும் செயலும் மற்றவர்களுக்கு பயன்படும் விதமாக அமைய வேண்டும் என்பதை குறிக்கின்ற்து.

அய்யா வைகுண்ட பரம்பொருளை நாடிவரும் பக்தர்கள் எல்லோரும் ஜாதி மதத்தை மறந்து உயர்ந்தோர் தாழ் தோர் என்ற வேறுபாடின்றி எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற சமத்துவத்தை குறிக்கின்றது.

அன்னதர்மம்

தினமும் மதியம் 1:00 மணிக்கு நித்திய அன்னதர்மம் உண்டு.

வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை மதியம் 1:00 மணி முதல் அன்னதர்மம் மிகவும் சிறப்பாக அன்புக் கொடி மக்களின் உபயத்தால் நடைபெற்று கொண்டே இருக்கிறது.

 
 
 
Copyrighst @ Ayya Vaigunda Dharmapathi , Manali Puthu Nagar, Chennai