அருள் நூல்  
 

 

அய்யா
நாங்கள்
அறிந்து அறியாமல் செய்ததெல்லாம்
அய்யா பொறுக்கனும்.
(5 முறை சொல்லவும்)
அய்யா பொறுத்து
அய்யா மாப்புத்தந்து
அய்யா வைத்து ரெட்சிக்கனும்
அய்யா பொறுமை தரனும்

அய்யா நாங்கள்,
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
ஒண்ணுக்கொண்ணு
நிரப்பாயிருக்கணும்.

அய்யா நல்ல புத்தி தரனும்!
அய்யா அன்னமும் வஸ்திரமும் தந்து
அய்யா வைத்து ரெட்சிக்கணும்!

அய்யா எங்களை,
யாதொரு நொம்பலம் இல்லாமலும்
யாதொரு சஞ் சலம் இல்லாமலும்
அய்யா வைத்து ரெட்சிக்கணும்!

குறிப்பு:
1. உகப்படிப்புக்கு முன்பும், பின்பும் மாப்பு கேட்கவேண்டும்
2. உச்சிப்படிப்புக்கு முன்பு மட்டும் மாப்பு கேட்க வேண்டும்

உகப்படிப்பு

அய்யா! சிவசிவ சிவசிவ அரகர அரகரா!
சிவசிவ சிவசிவ அரகர அரகரா!
சிவசிவா குருவுக்கும், குருபண்டாரத்திக்கும்
சிவசிவா முறையோம் முறையோம் முறையோம்
சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும்
சிவசிவா முறையோம் முறையோம் முறையோம்
சிவசிவா அய்யா நாராயணர்க்கும்
நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும்
சிவசிவா கட்டியம் கட்டியம் கட்டியம்
சிவசிவா அய்யா நாராயணசாமி
செயம் செயம் செயம்
சிவசிவா அரகரா செயம் செயம் செயம்
தேசம் அகம் ஏகம் சிருஷ்டித்த மகாபர இந்திர நாராயண அய்யா
நிச்சயித்தபடி யல்லாது மனிதன் நிச்சயித்த படியல்ல அய்யாவே

உச்சிப்படிப்பு

சிவசிவா அரிகுரு சிவசிவா
சிவசிவா ஆதிகுரு சிவசிவா
மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம்
அல்லா இல்லல்லா இறைசூல் மகிலல்லா சிவசிவா
சிவமண்டலம்
அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம்
நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம்
பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா
சிவமண்டலம்
திருவுக்கும் சடைகுரு சிவசிவா சிவமண்டலம்
செங்கண் திருகுரு சிவசிவா சிவமண்டலம்
சன்னாசி குரு சிவசிவா சிவமண்டலம்
மகாகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம்
அரி சங்காரகுரு சிவசிவா சிவமண்டலம்
மகாகுரு சிவசிவா சிவகுரு மண்டலம்
மண்டலம் குருமண்டலம் மாயன் குருமண்டலம்
குண்டலம் குருகுண்டலம் சிவசிவா குருகுண்டலம்
சங்கம் நதிகுண்டலம் தரணி குருகுண்டலம்
தரணி யது குண்டலம் தரணி புகழ் குண்டலம்
சிவசிவா எங்கும் நிறைந்தவர் ஏகமயமாய் நின்றவர்
சிவசிவா
ஏக குருவாகப் படைத்து அது நிறைந்தவர்
சிவசிவா
படைத்து நிறைந்தவர் பாலன் வடிவு கொண்டவர்
பங்காளர் பங்காளர் பாருலோகம் அளந்தவர்
அளந்தவர் திருமாலு ஆதிகுரு சன்னாசி
சிவசிவா சன்னாசி செந்தில்வேல் வடிவுமவர்
செந்தில்வேல் சன்னாசி செந்தில்வேல் அவர்
வடிவம்புகழ் படைத்தவர் மாய நிறமானவரவர்
சிவசிவா
கங்கை கண்ணானவர் காரணம் நிறைந்தவர்
நிறைந்து நிறைந்தவர் ஏகமெல்லாம் நிறைந்தவர்
எங்கும் நிறைந்தவர் ஏகமாய் நின்றவர்
மண்டலம் புகழ்படைத்த மாயன்குரு சந்நியாசி

சிவசிவா தந்தேனன்னாய் தன்னானாய்
தந்தேனன்னாய் தன்னானாய்
சிவசிவா த....ம... அ..அ. சி.
அரிநன்றாகக் குருவே துணை
சிவசிவா தெந்திநின்னாய் தென்னானாய்,
தெந்தி நின்னாய் தென்னானாய்
சிவசிவா தன்னானாய் தன்னானாய்,
தன்னானாய் தன்னானாய்
சிவசிவா தானானோம் தானானோம் ,
தானானோம் தானானோம்
சிவசிவா நானானோம் நானானோம்,
நானானோம் நானானோம்
சிவசிவா தந்தே நனனம் தந்தேனனம்,
தந்தேநனனம் தந்தேநனனம்

மகா லிங்கம் சிவ லிங்கம்
குரு லிங்கம் திரு லிங்கம்
ஏக்கா லிங்கம் ஏக லிங்கம்
அரி லிங்கம் லிங்கா லிங்கம்
சொக்க லிங்கம் சுகா லிங்கம்
ஆதி லிங்கம் அருள் லிங்கம்

அடங்கா லிங்கம்.

 
அறிவிப்புகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Copyrighst @ Ayya Vaigunda Dharmapathi , Manali Puthu Nagar, Chennai